முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்?

Dhanush2கோலிவுட்டில் தற்போதைய பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுவதால், அடுத்தடுத்து தனுஷுக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இவர் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் விஐபி-2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர், பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

நடிகர்-தயாரிப்பாள்-பாடகர் என தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் தனுஷ், பிரபு சாலமன் படத்திற்கு பிறகு துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

துரை.செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய ‘எதிர்நீச்சல்’ படத்தை தனுஷ்தான் தயாரித்திருந்தார். தற்போது தனுஷ்-துரை.

செந்தில்குமார் இணையும் படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதாவது, கதைப்படி தனுஷ் இப்படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதர்களாக வருகிறாராம். அவருடைய ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்ட தனுஷ், தற்போது இந்த படத்தின் மூலம்தான் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries