வில்லனாக நடிக்கும் சூர்யா?

surya-raktha-charitra-005சூர்யா தற்போது ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இதில், சூர்யா, ஒரு வேடத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆக்ஷன், திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை விக்ரம் குமார் இயக்கி வருகிறார். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries