பிரம்மாண்ட இயக்குனரை கவர்ந்த இரண்டு நாயகிகள்

rajamouli_630x450_71433681652சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை இயக்கிய ராஜமௌலி, பிரம்மாண்ட இயக்குனர்களின் வரிசையில் இணைந்துவிட்டார் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் பிரம்மாண்டம் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார்.

ஆனால், இவரை இரண்டு நாயகிகளின் படங்கள் பெரிதும் வியக்க வைத்துள்ளது. அவர்கள் வேறுயாருமல்ல, அனுஷ்கா, திரிஷா ஆகியோர்தான்.

சமீபத்தில் வெளிவந்த அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’, திரிஷாவின் ‘நாயகி’ ஆகிய படங்களின் போஸ்டர்கள்தான் ராஜமௌலியை மிகவும் வியக்க வைத்துள்ளது.

இதுகுறித்து ராஜமௌலி கூறும்போது, சமீபத்தில் வெளிவந்த இரண்டு படங்களின் போஸ்டர்கள் எனக்கு மிகப்பெரிய ஆர்வத்தை கொடுத்திருக்கின்றன. ஒன்று, அனுஷ்கா நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ பட போஸ்டர். இது பார்க்க அழகாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

மற்றொன்று திரிஷா நடித்துள்ள ‘நாயகி’ படத்தின் போஸ்டர். இதில், திரிஷா உதட்டில் சிறு புன்னகையுடன், கையில் கத்தியுடனும் பார்க்கும்போது என்னை கொல்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ராஜமௌலி தற்போது ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் படப்பிடிப்பை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online