விக்ரமை விட சூர்யாவுக்கு முன்னுரிமை கொடுத்த ஹரி

image‘பூஜை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரி தற்போது ‘சிங்கம் 3’ படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ படத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய படத்தை உருவாக்க இருக்கிறார்.

இந்த படத்திற்காக சமீபத்தில் வெளிநாடுகளில் உள்ள படப்பிடிப்பு தளங்களை பார்வையிட்டு வந்துள்ளார். இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க இருக்கிறார். முதல் இரண்டு பாகங்களில் ஜோடியாக நடித்த அனுஷ்கா இந்த படத்தில் இடம் பெறவில்லை என்று தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக சுருதி ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. சூர்யா தற்போது ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ‘சிங்கம் 3’ படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறார். இப்படத்தையடுத்து ஹரி ‘சாமி’ படத்தின் 2ம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சாமி’ படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இதனால் ‘சிங்கம் 3’ முடிந்த பிறகு ‘சாமி 2’ படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online