விஜய் ஆண்டனியை அழவைத்த பிச்சைக்காரன்

1440221541_composer-turned-actor-vijay-antonys-pichaikaran-first-look-poster-directed-by-poo-sasi-vijayஇசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ‘நான்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியையடுத்து ‘சலீம்’ படத்தில் நடித்தார். இதுவும் ரசிகர்களை கவர, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.

கடைசியாக இருவருடைய நடிப்பில் வெளியான ‘இந்தியா பாகிஸ்தான்’ படமும் நன்றாக ஓடியது. தற்போது இவரது நடிப்பில் ‘பிச்சைக்காரன்’ படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை சசி இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இப்படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும்போது, ‘பிச்சைக்காரன்’ படத்தின் கதையை இயக்குனர் சசி என்னிடம் கூறியபோது நான் அழுதுவிட்டேன்.

அவர் சொன்ன சோகக் காட்சிகளை விட சந்தோஷமான காட்சிகளைப் பற்றி சொன்னபோது, கண்ணீர் வந்துவிட்டது. அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு போராட்டங்கள் நிறைந்ததாக உருவாக்கியிருந்தார் சசி’’ என்றார்.

‘பிச்சைக்காரன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries