வெளிநாடுகளில் இப்படியில்லை. இரண்டு வலுவான கதாபாத்திரங்கள் இருந்தால் திறமையான இரண்டு நடிகர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.
இந்திய சினிமாக்களில் மட்டும்தான், வலுவான கதாபாத்திரங்கள் எத்தனை இருந்தாலும் அத்தனையிலும் நாயகனே நடிக்க ஆசைப்படுவார்.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 24 படத்தில் நாயகன், வில்லன் இரண்டுமே வலுவான கதாபாத்திரம். அதனால் இரண்டிலும் நடித்து வருகிறார் சூர்யா. அவரே தயாரிப்பாளர். ஏன் என்று கேட்கவா முடியும்? ஆனால் தனது நடிப்பால் இரண்டு கதாபாத்திரத்தையும் சிறப்பாக்குவார் என்பதில் ஐயமில்லை.
சமந்தா, நித்யா மேனன் உடன் நடிக்கும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.