சந்தானம் இடத்தை பிடித்த விவேக்

Santhanam-Vivekஇந்தியில் போமன் இரானி, அர்ஷத் வர்ஷி, அமிர்தா ராவ், ஷரப் சுக்லா ஆகியோர் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘ஜாலி எல்.எல்.பி.,’ பொலிட்டிக்கல் திரில்லர் படமாக வெளிவந்த இப்படம் இந்தியில் சக்கை போடு போட்டது.

இதைத் தொடர்ந்து இப்படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தை உதயநிதி தமிழிலில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி, இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி அதில், இவரே நடிக்கவும் முடிவு செய்தார். இதையடுத்து, இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா ஒப்பந்தமானார். அவரைத் தொடர்ந்து ராதாரவியும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

தற்போது, இப்படத்தில் புதிதாக காமெடி நடிகர் விவேக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். விவேக்கும்-உதயநிதியும் இணையும் முதல் படம் இதுவாகும். இதுவரை உதயநிதி நடித்த படங்களில் எல்லாம் காமெடி வேடத்தில் சந்தானம்தான் இடம்பெற்றிருந்தார். தற்போது, அந்த இடத்தை விவேக் கைப்பற்றியுள்ளார்.

உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் ‘கெத்து’ படத்திலும் சந்தானம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அகமது இயக்கவிருக்கிறார். உதயநிதி தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online