சீச்சீ அந்தப் பழம் புளிக்கும் – மீண்டும் புளிப்பு காட்டும் லட்சுமிமேனன்

1440508654-1627எட்டோ பத்தோ படிக்கும் போது நாயகியானாராம். அந்த அனுபவமின்மையா இல்லை வயதுக்கு மீறிய அனுபவ முதிர்ச்சியா? சரியாகத் தெரியவில்லை.

ஆனால், அடிக்கடி அவர், அந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வதைப் பார்த்தால், அந்தப் பழத்தின் மீது அவ்வளவு ஆசையாக இருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.

இங்கே அவர் என்பது லட்சுமி மேனனை. பழம்? திருமணம்.

நடிக்க வந்த புதிதில், ‘பலர் என்னை காதலிக்கிறார்கள். ஆனால் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்’ என்றார் லட்சுமி மேனன்.

கொஞ்ச நாள் கழித்து, திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்றார். அப்புறம், காதலிப்பேன், கல்யாணம் வேண்டாம் என்றார். பிறகு, எனக்கு இப்போது கல்யாண வயசில்லை, அது வரும் போது பார்க்கலாம் என மறுபடியும் குழப்பினார்.

சமீபத்தில், திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று மீண்டும் புளிப்பு காட்டியிருக்கிறார்.

இப்போதானே பிளஸ் டூ முடிச்சிருக்கீங்க. காலம் கனியும்போது ஹார்மோன்கள் சரியாக முடிவெடுக்கும். அதுவரை கம்முன்னு இருங்க சகோதரி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online