சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “கபாலி” கெட்டப் வெளியானது

Viral-photoshoot-still-leaves-Kabali-team-upsetரஜினியின் புதிய படத்தை அட்டகத்தி ரஞ்சித் இயக்க போகிறார் என்ற தகவல் வந்ததிலிருந்து கோலிவுட் வட்டாரத்தில் செய்திகளுக்கு பஞ்சமில்லை.

ஒரு பக்கம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் சர்ச்சை. தலைப்பு வைத்ததிலிருந்தே சர்ச்சைதான். கபாலி டைட்டில் என்னுடையது என்று மைசூரிலிருந்து ஒருவர் வந்தார். ஆனால் நீங்க டைட்டிலை புதுபிக்கவில்லை என்று தயாரிப்பளார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இப்பொழுது கெட்டப்பும் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தலைப்பு வெளியானதும்.ரஜினி எந்தவிதமான கெட்டப்பில் நடிக்கவிருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, தினம் தோறும் சமூக வலைதளங்களில் வயதான கெட்டப்பில் பல படங்கள் ரசிகர்கள் வெளியிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரஞ்சித் ரஜினியை வைத்து போட்டோஷூட் நடத்தினர் .அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் படக்குழுவினருடன் வயதான தோற்றத்தில் ரஜினி அமர்ந்துள்ளார்.

ரசிகர்கள் நினைத்தபடியே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் காபலி படத்தில் நடிக்க போவதால் .சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries