ஸ்டுடியோ கிரீன் வெளியிடும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

1440578758-2019ஜீ.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், ஆனந்தி நடித்துள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை ஸ்டுடியோ கிரீன் வாங்கி வெளியிடுகிறது.

ஒரு பெண் காதலியாக அமையவில்லை என்றால் இன்னொரு பெண்ணை தேடிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. அதை பிரதிபலிக்கும் விதமாக, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என பெயர் வைத்தார் இயக்குனர் ஆதிக்.

படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படத்தை வெளியிடுகின்றனர். இரு மொழிகளுக்குமான டப்பிங் பணிகள் முடிந்ததால் விரைவில் சென்சார் சான்றிதழ் வாங்கி, அடுத்த மாதமே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

கேமியே ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடித்திருப்பதுடன் ஜீ.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online