சிம்பு படத்தில் அனிருத்?

Simbu-Anirudh-சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘வாலு’ படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து, கௌதம் மேனன், செல்வராகவன், பாண்டிராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, இயக்குனர் அமீர் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவ்விருவரும் இணையும் புதிய படத்தின் கதாநாயகியாக தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

சிம்புவின் தொழில் முறை போட்டியாளராக கருதப்படும் தனுஷுக்கு நெருக்கமான அனிருத், சிம்பு படத்தில் இசையமைக்கிறாரா? என்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. ஆனால், இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

ஏனென்றால், தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்திலேயே சிம்பு ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதால், அனிருத்துடன் இணைவது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online