பிறந்தநாளில் விஷால் எடுக்கும் புதிய சபதம்

mfpkKBhjgdbsiவிஷால் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘பாயும் புலி’ . இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதை தவிர பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார்.

விஷால் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக இருந்தாலும், தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்விக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார். இவருக்கு நாளை பிறந்தநாள்.

இந்த ஆண்டு பிறந்த நாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட இருக்கிறார். மேலும் பிறந்த நாளை முன்னிட்டு இனிமேல் பார்ட்டிகளில் கலந்துக் கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். கல்வி, பள்ளி குழந்தைகள் மீது அதிக ஆர்வம் இருக்கிறதாம். இதனால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய இருப்பதாகவும் சபதம் எடுத்திருக்கிறார்.

விஷாலுக்கு இன்றைய இளம் நடிகர்களான, ஆர்யா, விஷ்ணு, விக்ராந்த் உள்ளிட்ட பலர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய படங்களின் வெற்றி, பிறந்த நாள் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு பார்ட்டி கொடுப்பது வழக்கம்.

ஆனால், இனிமேல் விஷால் பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருப்பதால், இவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online