நல்ல கதை அமைந்ததால் மீண்டும் நடிக்கிறேன்: ஐஸ்வர்யாராய் பேட்டி

25aish1நடிகை ஐஸ்வர்யாராய் திருமணத்துக்குப்பிறகு நடிப்பதை குறைத்தார். கர்ப்பமானதும் தற்காலிகமாக விலகினார். குழந்தை பிறந்தபின் அதை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘ஜாஸ்பா’ என்ற இந்தி படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இதன் படவேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இந்த படத்தில் இர்பான்கான், சப்னாஆஸ்மி, ஜாக்கிஷராப், அதுல்குல்கர்னி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அக்டோபர் 9-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஐஸ்வர்யாராய் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் 5 வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும், சினிமாவைவிட்டு ஒதுங்கிவிட்டதாக உணரவில்லை. ஏற்கனவே நடிகராக இருந்த ஒருவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும், அவர் எப்போதுமே நடிகர்தான் என்று மூத்த நடிகர்கள் சொல்வதுண்டு. அது உண்மை என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.

நடிகர், நடிகையாக இருப்பவர்களுக்கு தங்கள் வேலையில் திருப்தி ஏற்படவேண்டும். அது ரொம்ப முக்கியம். திருமணத்துக்கு முன்பும் நடித்தேன், இப்போதும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எப்போதும் அர்ப்பணிப்பு உணர்வோடுதான் எனது கடமையை செய்கிறேன்.

தாய் என்ற உறவிலும் உறுதியாக இருக்கிறேன். நல்ல கதைக்காக காத்து இருந்தேன். அந்த கதை இப்போது அமைந்து இருக்கிறது. இந்த படத்தில் சம்பளத்துக்கு பதில் லாபத்தில் பங்கு கேட்கிறீர்களா? என்று என்னிடம் கேட்கின்றனர். அதற்கு பதில் சொல்லமுடியாது”.

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries