ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான்: விஜய் ஆண்டனி

25-vijay-antonys-next-is-pichaikaranவித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. வித்தியாசமான கதை மட்டுமல்லாமல் இவருடைய படத்தின் தலைப்பும் வித்தியாசமாகவே இருக்கும்.

அந்த வரிசையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்தின் போஸ்டரும், டீசரும் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும்போது, ‘நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘பிச்சைக்காரன்’ ஒளிந்து இருக்கிறான். பிச்சையின் தன்மை தான் வேறுபடுகிறது. இயக்குனர் சசியுடன் சந்தர்ப்பவசமாக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முறை சந்திக்க நேரிட்டது. அவருடன் நான் ஏற்கனவே ‘டிஷ்யூம்’ படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளேன்.

அவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘சொல்லாமலே’, ‘ரோஜா கூட்டம்’, ‘டிஷ்யூம்’, ‘பூ’ , ‘555’ படங்களின் மூலம் என்னை மிகவும் கவர்ந்தவர். அவருடன் ஒரு நடிகராக பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசையின் பின்னணியில் அவரிடம் இப்படி ஒரு கதை இருப்பதாக சொன்னவுடன் உடனடியாக நேரம் ஒதுக்கி கதைக் கேட்டேன்.

மூன்று மணி நேரத்துக்கும் மேல் கதைக் கேட்டு எனக்கு சிறிதளவும் சோர்வு ஏற்படவில்லை. அவ்வளவு யதார்த்தம், அவ்வளவு வேகம். உடனடியாக எப்ப ஆரம்பிக்கலாம் எனக் கேட்டேன்.

சிரித்துக் கொண்டே எப்ப வேணும்னாலும் என்று சொன்னவர் தலைப்பு ஓகே வா எனக் கேட்டார். ‘வளர்ந்து வரும் நடிகரான உங்களுக்கு இது எதிர் மறையாக போய் விடுமோ?’ என்று தன் அச்சத்தை வெளிபடுத்தினார்.

ஆனால் நான் இந்த தலைப்பு தான் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன். இதுவரை எந்த ஒரு ஹீரோவும் இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை என்பதும் எனக்கு உந்துதல் ஆக இருந்தது.

நான் நடிகனாக வேண்டும் என முடிவெடுத்த நாளே ‘இமேஜ்’ வட்டத்துக்குள் சிக்கி விடக் கூடாது என்பதில் தீவிரமாக முடிவெடுத்து விட்டேன்.

படம் பார்க்க வரும் ரசிகர்கள் இரண்டரை மணி நேரம் பொழுதை போக்க வேண்டும். அவர்கள் மன நிறைவோடு அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்பது மட்டுமே நடிகனாக என்னுடைய இலக்கு. அந்த வகையில் ‘பிச்சைக்காரன்’ நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.

‘பிச்சைக்காரன்’ டீசர் வெளிவந்து ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று வருவது படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பை கூட்டுவதை நான் அறிவேன். ஒரு வெற்றி படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களும் பொருந்திய ‘பிச்சைக்காரன்’ நவம்பர் மாதம் வெளிவரும்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online