மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வரும் சிம்பு

Acham-Enbathu-Madamaiyada-Movie-Stills-Photos-Pictures-4சிம்பு நடிப்பில் உருவான ‘வாலு’ படம் பல பிரச்சனைகளை சந்தித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மூன்று வருடங்கள் கழித்து படம் வெளியானாலும் சிம்பு ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டீசர் 29ம் தேதி வெளியாகவுள்ளது. வாலு படம் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த சிம்பு, தற்போது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டீசர் மூலம் மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு முடியவுள்ளது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online