சமூக வலைத்தளங்களில் விவாதம் நடத்தும் இஞ்சி இடுப்பழகி படக்குழுவினர்

inji-iduppazhagiஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து நடித்து வரும் புதிய படம் ‘இஞ்சி இடுப்பழகி’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார். காதலுடன் நகைச்சுவை கலந்த படமாக உருவாகிவரும் இப்படத்தில் சோனல் சௌஹன், பிரகாஷ்ராஜ், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை பற்றி இதுவரை வெளிவந்த செய்திகள் அனுஷ்காவின் பிரம்மாண்ட உருவத்தைப் பற்றியே அதிகமாக வெளிவந்தது.

தற்போது, ஒருவருடைய உடல்வாகு சமுதாயத்தில் அவர்களுக்கு எத்தகைய அடையாளத்தை பெற்று தருகிறது என்பதையும், சமூகத்தில் நிலவும் அன்றாட பிரச்சினைகளை பற்றிய கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் இஞ்சி இடுப்பழகி படக்குழுவினர் விவாதிக்க உள்ளனர்.

அனுஷ்காவுடைய உருவ அமைப்பு பற்றிய கருத்துக்களுக்கு அவரது பதில் ‘அழகு என்பது உருவத்தில் உருவானது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக் கொள்வதுதான் சரி என்றக் கோணத்தில் விவாதிக்க உள்ளார் அனுஷ்கா.

சதா சர்வமும் உடல் பயிற்சியை பற்றியே பேசும் ஆர்யாவோ ‘ உடல் பயிற்சியின் அத்தியாவாசத்தையும், ஊட்டசத்து உள்ள உணவின் அவசியத்தையும் பேச இருக்கிறார். இதன் மூலம் ரசிகர்கள் இடையே படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாக்க முடியும் என நம்புகிறார்கள் படக்குழுவினர்.

இதை ஒட்டி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு போட்டியும் நடக்க இருக்கிறதாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் இசை வெளி வர உள்ளதாகவும் , அக்டோபர் மாதம் படத்தை வெளியிட தீவிர முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. இப்படத்தை பிவிபி சினிமா மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online