ஜீ.வி.பிரகாஷுடன் நடிக்கும் நயன்தாரா?

1440845344-1337ஜீ.வி.பிரகாஷ் முழுநேர நடிகராகி வருகிறார். அடுத்த மாதம் அவர் நடித்த, த்ரிஷா இல்லனா நயன்தாரா வெளியாகிறது.

இதையடுத்து அவர் புரூஸ்லீ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முதலில், பாட்ஷா என்கிற ஆண்டனி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். பாட்ஷா படத்தை தயாரித்த சத்யா ஸ்டுடியோ இந்தப் பெயருக்கு அனுமதி தராததால் புரூஸ்லீ என்று பெயரை மாற்றினர்.

அத்துடன், கெட்ட பையன்டா இந்த கார்த்தி என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் புரூஸ்லீயில் அவர் சமந்தாவுடன் நடிப்பதாக கூறப்பட்டது. இப்போது நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். இன்னும் ஜீ.வி.பிரகாஷுடன் நடிப்பது பற்றி பதில் கூறாமலிருக்கிறார் நயன்தாரா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online