சூர்யாவின் ஹைக்கூ பசங்க -2 வாக மாற்றம்

pasanga2சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வருகின்ற புதிய படம் ‘ஹைக்கூ’. இப்படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை இல்லை என்பதால் இந்த படத்திற்க்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, படத்தின் தலைப்பை மாற்ற சூர்யா மற்றும் இயக்குனர் பாண்டியராஜ் முடிவு செய்தனர். பாண்டிராஜ் இயக்கத்தில்‘பசங்க’படம் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் மற்றும் தேசிய விருதையும் பெற்றது .

தற்போது ஹைக்கூ படமும் குழந்தைகளுக்கு முக்கியதவம் கொடுத்துள்ள படம் என்பதால் இப்படத்திற்கு ‘பசங்க-2’ என்று தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து, அந்த தலைப்பையே தற்போது இறுதியாக இயக்குனர் பாண்டியராஜ் தேர்வு செய்துள்ளார்.

இந்த தலைப்புடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அடுத்த மாதம் இப்படத்தின் ஆடியோவையும், டிரைலரையும் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries