கீர்த்தி சுரேஷ் இடத்தை பிடித்த காஜல் அகர்வால்

Kajal-Aggarwal-replaces-Keerthy-Sureshகீர்த்தி சுரேஷ் நடித்த முதல்படமான ‘ரஜினி முருகன்’ படம் இன்னும் வெளிவரவே இல்லை. அதற்குள் இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

இவர் ஜீவாவுக்கு ஜோடியாக ‘கவலை வேண்டாம்’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்திற்காக ஜீவா-கீர்த்தி சுரேஷ் இணைந்து போட்டோ ஷுட் எல்லாம் எடுக்கப்பட்டது. இந்த படங்கள் அதிகாரப்பூர்வமாகவும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இப்படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை ஜீவாவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் ஏற்கெனவே நடித்து வந்த படங்களில் அவரது பணி இன்னும் முடிவடையாததால் இப்படத்திற்கு சரியான நேரத்தில் கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. எனவேதான் இப்படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது புதிதாக ஒப்பந்தமாகியிருக்கும் காஜல் அகர்வால் இப்படத்தின் கதையை கேட்டவுடனே இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஜீவாவும், காஜலும் ஒன்றாக இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ என்ற படத்தை இயக்கிய டி.கே. இயக்குகிறார். ஆர்.எஸ். இன்போடைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெண்களை மையப்படுத்திய படமாக இது உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online