பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ‘உறுமீன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்து வருகிறார். சக்திவேல் பெருமாள் சாமி இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இப்படத்தில் பாபி சிம்ஹா நடித்து வரும் கதாபாத்திரங்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி, பாபி சிம்ஹா இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.
செல்வா, செழியா என்ற இரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்களும் வெவ்வேறு விதமானது என்று கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுக்கு முன்னரே கதையை தயார் செய்துவிட்ட இயக்குனர், சரியான நேரத்திற்கு காத்திருந்து பிறகு பாபி சிம்ஹாவை வைத்து படமாக்கியுள்ளார். சக்திவேல் பெருமாள் சாமி பாபி சிம்ஹாவின் நெருங்கிய நண்பரும் கூட.
பாபி சிம்ஹா இப்படத்தை தொடர்ந்து ‘பாம்பு சட்டை’, ‘பெங்களூர் டேஸ் ரீமேக்’, ‘கோ-2’, ‘மசாலா படம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களில் எல்லாம் இவருக்கு முன்னணி ஹீரோயின்கள் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.