அருள்நிதிக்கு இரண்டாவது ஜோடியான நிக்கி கல்ராணி

Nikki-Galrani-signs-Arulnidhi’s-film‘டார்லிங்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. இப்படத்தை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் ‘கோ-2’ படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்தில் காஜல் அகர்வாலுடன், இன்னொரு நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், அருள்நிதி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்திலும் நிக்கி கல்ராணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அருள்நிதி தற்போது மலையாளத்தில் வெளிவந்த ‘மெமோரிஸ்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அறிவழகன் இயக்கவுள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்த ‘மெமோரிஸ்’ படத்தில் ப்ரித்விராஜுக்கு மியா ஜார்ஜ், மேக்னா ராஜ் என்று இரு கதாநாயகிகள். எனவே, ரீமேக்கிலும் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர்.

ஏற்கெனவே, இப்படத்தில் மேனால் கஜ்ஜார் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு கதாநயாகிக்கு நிக்கி கல்ராணியை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries