கடைசி நாள் படப்பிடிப்பில் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட சமந்தா

10-Enradhukulla-Movie-wrap-upசமந்தா-விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இப்படத்தை ‘கோலிசோடா’ இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இப்படம் காஷ்மீரில் தொடங்கி நேபாளத்தில் முடியும் ஒரு பயணம் சம்பந்தப்பட்ட கதை.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆபத்து மிகுந்த பகுதிகளில் படமாக்கியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பு ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ரொம்பவும் அற்புதமான டீம், அற்புதமான பணிகள். இவை கிடைப்பது மிகவும் பாக்கியமான ஒன்று. இத்துடன் படப்பிடிப்பு முடிந்தது. கடைசி நாள் படப்பிடிப்பு ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்நது விரைவில் இப்படத்தின் டிரைலரையும், ஆடியோவையும் வெளியிடவுள்ளனர். அக்டோபர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online