டீசரை தொடர்ந்து நவம்பரில் வெளியாகிறது அச்சம் என்பது மடமையடா

Acham-Enbathu-Madamaiyada-Movie-stills-5‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்பு-கௌதம் வாசுதேவ மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘அச்சம் என்பது மடமையடா’. நீண்டகால தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரை பார்த்த பெரும்பாலோனார் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகத்தை போன்று இப்படம் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், இந்த டீசரில், ஏ.ஆர்.ரகுமானின் மனதை கொஞ்சும் பின்னணி இசை நம் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் முத்தான ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. அதில், ஒரு பாடலான ‘அவளும் நானும், அமுதும் தமிழும்’ என்ற பாடல் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடலை கேட்பதற்கே ரொம்பவும் இனிமையாக உள்ளது.

படத்தில் இப்பாடலை இசைக்கும், பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கவிருக்கிறார்களாம். டீசரைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளனர். வரும் நவம்பர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries