மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் நடித்த பேய் படம் தமிழில் டப் ஆகிறது

meera-jasmine-stills-in-miss-lekha-tharoor-kaanunnathu-18மீரா ஜாஸ்மின் நடிப்பில் மலையாளத்தில் ‘மிஸ்ஸஸ் லேக்கா தரூர்’ என்ற பெயரில் வெளிவந்த திகில் படம், தற்போது தமிழிலும் டப் செய்யப்படுகிறது. இப்படம் தமிழில் ‘கண்கள் இரண்டால்’ என்ற பெயரில் வெளிவருகிறது.

இப்படத்தின் கதாநாயகனாக அலெக்ஸ் நடித்திருந்தார். மேலும், வேணி, முத்துலட்சுமி, மகேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஷாஜியம் என்பவர் இயக்கியுள்ளார். ரமேஷ் நாராயணன் இசையமைக்க, சந்திரமௌலி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் முதல்முறையாக மீரா ஜாஸ்மின் பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார். அதாவது கதைப்படி, பார்வை இல்லாத மீராஜாஸ்மின் டிவி சேனல் ஒன்றி ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். இதற்கிடையில் காதலில் விழுந்த மீரா ஜாஸ்மினுக்கு ஆபரேசன் செய்ய காதலன் ஏற்பாடுகளை செய்கிறார்.

ஆனால் மீராஜாஸ்மினுக்கு தனது உடம்பில் ஏதோ ஒரு ஆவி இருப்பது போல் ஒரு உணர்வு. தனது அருகில் ஏதோ ஒரு உருவம் இருப்பதுபோல் தோன்றி கொண்டே இருக்கிறது. இறுதியில் அது வெறும் உணர்வுதானா அல்லது நிஜமாகவே அவரது உடலில் ஆவி இருந்ததா? என்பது தான் படத்தின் திரைக்கதை.

திரில்லர் மற்றும் காதல், நட்பு போன்ற அனைத்தும் கலந்து உருவாகியுள்ளது. இப்படத்தை டி.வி.சினி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனர் சார்பில் வெங்கேடஷ் தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries