சமந்தாவின் புதுவில்லி ராகுல் ப்ரீத் சிங்

1429168293-176விக்ரம், ஆர்யா, விஜய், கார்த்தி, சமந்தா என்று தமிழின் எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. கூட்டிக் கழித்தால் இப்போதைக்கு தமிழில் அவர்தான் நம்பர் ஒன்.

ஆனால், தெலுங்கில்?

ராகுல் ப்ரீத் சிங் என்ற ஒரு அழகான வில்லியால் சமந்தாவின் மார்க்கெட் சர்ரென்று இறங்கியிருக்கிறது.

மகேஷ் பாபு நடிக்கும் பிரமோற்சவம் படத்தில் சமந்தாதான் ஹீரோயின் என்றார்கள். மகேஷ் பாபுவின் பட போஸ்டரை முன்பு சமந்தா ட்விட்டரில் விமர்சனம் செய்திருந்தார்.

அதனால் இன்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் காலையில் கண்விழித்ததும் சமந்தாவை இரண்டு திட்டு திட்டிவிட்டுதான் அடுத்த வேலையை பார்க்கிறார்கள்.

தலைவா சமந்தா வேண்டாம் என்று ஆந்திரா முழுவதிலிருந்தும் கூக்குரல்கள் எழுந்தன. அதற்கு செவிசாய்த்து படத்திலிருந்து சமந்தாவை தூக்கிவிட்டார் மகேஷ் பாபு. அந்த இடத்துக்கு புதிதாக வந்திருப்பவர் ராகுல் ப்ரீத் சிங்.

சரி, இதற்காவது நதிமூலம் ரிஷிமூலம் இருக்கிறது. ஆனால், ராம் சரண் தேஜாவின் புதுப்படத்திலிருந்தும் சமந்தாவை நீக்கி, ராகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஏன்? எதற்கு? நம்மை போலவே சமந்தாவுக்கும் இதன் காரணம் தெரியாததால் ராகுல் ப்ரீத் சிங் என்ற பெயரைக் கேட்டாலே அதிகாலை அலாரம் போல் அலர்ஜியாகிறார் சமந்தா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries