அனிருத்துக்கு கிடைத்த அஜித்தின் பாராட்டு

1426251570-7991ஆளையே அடிக்கடி பார்க்க முடியாது. இதில் பாராட்டு என்பதெல்லாம் குறிஞ்சிப்பூதான். அஜித்தை பற்றிதான் சொல்கிறோம்.

விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், கல்யாணம், காது குத்து, இறுதிச்சடங்கு என்று எதிலும் அஜித் கலந்து கொள்வதில்லை. அப்படிப்பட்ட தனி உலகத்திலிருந்து பாராட்டு கிடைக்கிறது என்றால், அது விசேஷம்தானே.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்துக்காக அவர் சில படங்களை தவிர்க்க வேண்டி வந்தது. படம் இறுதிகட்டத்தை நெருங்கும் நேரம், அனைத்துப் பாடல்களையும் முடித்துவிட்டார் அனிருத்.

இந்தப் பாடல்களை கேட்ட அஜித் உற்சாகமாகி அனிருத்தை பாராட்டியிருக்கிறார். பார்க்கவே முடியாதவரிடமிருந்து கிடைத்த பாராட்டு இல்லையா? பரவசமாக இருக்கிறார் இந்த இளம் இசையமைப்பாளர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online