6 கேமராக்களில் 13 நாட்கள் எடுக்கப்பட்ட ஆர்.கே.- செல்வமணி க்ளைமாக்ஸ் ​சண்டை காட்சி

Vaigai Express- RK, Neetuchandra (19)மக்கள் பாசறை தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. ஆர்.கே.நாயகனாக நடிக்க, ஷாஜி கைலாஸ் இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘என்வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே. – ஷாஜி கைலாஸ் இணையும் மூன்றாவது படம் இது.​

நீதுசந்திரா பிரதான நாயகியாக நடிக்கிறார். இனியா,​ கோமல் சர்மா​, சுஜா வாருணி​ ​ஆகியோரும் நடிக்கிறார்கள் நடிப்பில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எதையும் செய்யத் துணிந்தவரான ஆர்கே இந்த படத்தில் சண்டைக் காட்சிகளில் ​பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

நம்மூர் சண்டை​ப் பயிற்சி​ போதாது என்று ​அமெரிக்கா போய் சண்டைப் பயிற்சியின் நுணுக்கங்களை​ கற்று வந்துள்ளார். நியூயார்க் அருகில் க்ரீன்பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்ட​ண்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்​று 15 நாட்கள் ​பயிற்சி எடுத்துள்ளார்.

பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சி​யும் பெற்றுள்ளார் ஆர்.கே. ​சேசிங் காட்சிக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்​து பயன்படுத்தியுள்ளார்.

படத்தின் பிரதான வில்லனாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நடிக்கிறார். குழந்தைகள் பூங்கா ஒன்றில் அவர் செய்யும் நாசகரமான அழிவைத் தடுக்கும் காட்சியில் சதியை தடுத்து நிறுத்த மோதிப் போராடும் காட்சியில் சண்டைக் காட்சியில் ஆர்.கே சாகசம் காட்டியுள்ளார்.

ஆர்கேவும்​, செல்வமணியும் மோதும் காட்சிகள் மிரட்டலாக​ எடுக்கப்பட்டுள்ளன. ​இந்த சண்டைக் காட்சிக்காக விதவிதமான மனித உருவிலான மண்பொம்மைகள் நூற்றுக்கணக்கில் செய்யப்பட்டன.

இந்த பொம்மைகள் அனைத்து குழந்தைகளை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை ஈ வி பி பார்க் முழுவதும் பரவலாக ஆங்காங்கே வைத்து, அத்தனை பொம்மைகளையும் காட்சிக்காக வெடி வைத்து வெடிக்க வைத்துள்ளனர்.

இந்த க்ளைமாக்ஸ் காட்சிகளை சண்டை இயக்குநர் கனல் கண்ணன் காட்சிகள் அமைக்க 13 நாட்கள் எடுத்துள்ளனர். இதில் ஃபாண்டம் கேமரா, ஹெலிகேம்கள் ​தவிர ஆறு கேமராக்கள் ​படப்பிடிப்பு நடந்த 13 நாட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இக்காட்சியை ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ​ஹாலிவுட்டிற்கு நிகரான சண்டைக் காட்சியாக கண்டுகளிக்கலாம்​. ​

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online