விஜய்யுடன் போட்டி போட விரும்பாத ஆர்யா

arya2281விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்திருக்கிறார்கள். மேலும் சுதிப், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

சிம்பு தேவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இப்படம் செப்படம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ‘புலி’ படம் அக்டோபர் 1ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

ஏற்கனவே அக்டோபர் 1ம் தேதி ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விஜய்யின் ‘புலி’ படம் வெளியாவதால் அன்றைய தினத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ படம் வெளியாகாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அக்டோபர் 1ம் தேதி தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில் இந்தப்படமும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries