தமிழ் கற்க ஆர்வம் காட்டும் எமிஜாக்சன்

amy-jackson-still-from-tamil-movie-ai_138355070520‘மதராசபட்டினம்’ மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் எமிஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’ படங்களில் நடித்தார்.

இப்போது தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். ஆங்கிலம் தாய் மொழி என்றாலும் தமிழ் கற்பதில் எமிஜாக்சன் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்.

காலையில் படப்பிடிப்புக்கு வரும் போது படக்குழுவினர் அனைவருக்கும் தமிழில் ‘வணக்கம்’ சொல்கிறார். யாராவது ‘குட் மானிங்’ என்று சொன்னாலும் எமிஜாக்சன் ‘வணக்கம்’ என்று கொஞ்சும் தமிழிலேயே சொல்கிறார்.

லைட்மேன், உதவியாளர்கள் அனைவரையும் ‘அண்ணா’ என்று அன்புடன் அழைக்கிறார். அவரிடம் ஆங்கிலத்தில் பேசுபவர்களிடம் ‘எனக்கு டமில்ல பேச ஆசை. உதவி செய்யுங்க…’ என்று மழலை மொழியில் கேட்கிறார்.

இது மட்டுமல்ல ‘டமில் ஸ்வீட் லேங்வேஜ்’ என்றும் அடிக்கடி புகழ்கிறார். அவரது தமிழ் ஆர்வத்தை கண்டு படப்பிடிப்பு குழுவினர் அசந்து நிற்கிறார்கள்.

தொடர்ந்து பேச முடியாவிட்டாலும் முடிந்த வரை சிறு சிறு வார்த்தைகளை தமிழில் சொல்கிறார். தொடர்ந்து தமிழில் பேச ஆசைப்படுகிறார். இது அவருடன் பழகுவோருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries