அனிருத்தை பாராட்டிய அஜித்

anirudh-ajithஅஜித் தற்போது நடித்து வரும் சிறுத்தை சிவா படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதையடுத்து, விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை அனைத்தையும் அனிருத் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்பாடல்களை சமீபத்தில் அஜித்துக்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத்.

அதைக் கேட்ட அஜித், அனிருத்தை மிகவும் பாராட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இவர் இசையமைத்ததில் இடம்பெற்றுள்ள ஒரு துள்ளல் பாடல் அஜித்தை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘வீரம்’ படத்திற்கு பிறகு ‘சிறுத்தை’ சிவா-அஜித் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டள்ளது. இப்படத்தில் இன்னும் சில காட்சிகள் சென்னையிலும், கொல்கத்தாவிலும் படமாக்கப்படவுள்ளது. அவை முடிந்த பிறகு இறுதிக்கட்ட பணிகளில் களமிறங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், லட்சுமிமேனன் அஜித்துக்கு தங்கையாக நடித்து வருகிறார். ஏ.எம்.ரத்னம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். வருகிற தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries