குறுகிய காலத்திலேயே படத்தை முடித்த அமலாபால்

AmalaPaulHotStills-48திருமணத்துக்கு பிறகு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அமலாபால், தனது முதல் தயாரிப்பில் தனது கணவரின் குருநாதரான பிரியதர்ஷனை வைத்து புதிய படத்தை தொடங்கினார். இப்படத்தில் அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ‘சில நேரங்களில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அமலாபாலுடன், பிரபுதேவாவும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற ‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜ்-பிரியதர்ஷன் இணைந்துள்ள படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை அதிவேகமாக நடத்தி, தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக இப்படத்தின் தயாரிப்பாளரான அமலாபால் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இறுதிநாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்திற்கு இசைக்கோர்ப்பு பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கவுள்ளனர்.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படாமலேயே படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. முதலில் ஏ.ஆர்.ரகுமான்தான் இப்படத்துக்கு இசையமைக்கப் போவதாக வெளிவந்த செய்திக்கு, படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.ரகுமானிடம் போட்டு காண்பிப்போம்.

அவருக்கு பிடித்திருந்தால் இப்படத்திற்கு அவர் இசையமைப்பார் என்று ஏ.எல்.விஜய் விளக்கம் கூறியிருந்தார். அதன்படி, விரைவில் இப்படத்தை ஏ.ஆர்.ரகுமானுக்கு திரையிட்டு காண்பிப்பார்கள் என தெரிகிறது. அதன்பிறகு, இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்பது உறுதியாகிவிடும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries