போலந்தில் டூயட் பாடும் சூர்யா-சமந்தா

Suriya-24‘அஞ்சான்’ படத்திற்கு பிறகு சூர்யாவும், சமந்தாவும் இணைந்து தற்போது ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை விக்ரம் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை சுற்றியே படமாக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில்கூட நாசிக்கில் இப்படத்துக்கான முக்கியமான காட்சியை படமாக்கினர். இந்த வார இறுதியில் மும்பையில் நடைபெற்று வரும் படப்பிடிப்புகள் முடிவடைய இருக்கிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, போலந்து நாட்டில் சூர்யா-சமந்தா ஆடி, பாடும் டூயட் பாடல் ஒன்றையும், சில காட்சிகளையும் படமாக்கவுள்ளனர். போலந்தில் இதுவரை படப்பிடிப்பு நடத்தாத அழகான இடங்களில் இந்த படப்பிடிப்புகளை நடத்தவுள்ளனர்.

இப்படத்தில் நித்யாமேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ப்ளாஸ் பேக்கில் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries