சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் சுருதிஹாசன்

Surya-Sruthi-Hassan-In-7am-Arivu-22011–ம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக சுருதிஹாசன் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக நடித்துள்ள ‘புலி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அடுத்து அஜீத்தின் 56–வது படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

தற்போது சூர்யா, விக்ரம்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘24’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வேகமாக முடித்து திரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து ‘சிங்கம் 3’ படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் ஹரி இதற்கான கதையை தயாரித்து விட்டார். அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சிங்கம் 3’ படத்தில் சூர்யா ஜோடியாக மீண்டும் சுருதிஹாசன் நடிக்க இருக்கிறார்.

இதற்கான பேச்சு வார்த்தை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. ‘சிங்கம் 3’ கதை அமைப்பின்படி சூர்யா ஜோடியாக சுருதிஹாசன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அவரை ஜோடியாக்கி இருக்கிறார்கள். இதற்கான முதல் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

சூர்யா தயார் ஆனதும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு ‘சிங்கம் 3’ படப்பிடிப்பு நடைபெறும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries