தொடர்ந்து வில்லனாக நடிக்க விரும்பவில்லை: அரவிந்த்சாமி

aravind-stroy_647_082415070820தனி ஒருவன் படத்தில் அமைதியான அழகிய வில்லனாக நடித்து இருக்கும் அரவிந்த் சாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ரசிகர்களும் இவரது நடிப்பை புகழ்ந்து வருகிறார்கள். மாறுபட்ட கோணத்தில் இயக்கியுள்ள ராஜா, சிறப்பாக காட்சிகளை பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோருக்கும் இது முக்கிய படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் வில்லனாக நடித்தது குறித்து அரவிந்த் சாமியிடம் கேட்ட போது… மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. தனி ஒருவன் படத்தில் வில்லன் வேடம் என்றாலும் வித்தியாசமான, எனக்கு பிடித்தமான வேடம் என்பதால் நடிக்கஒப்புக் கொண்டேன். நான் நினைத்ததுபோலவே ‘தனிஒருவன்’ படம் நன்றாக வந்திருக்கிறது.

எனது நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஹீரோ – வில்லன் என்பதைவிட கதை ரசிக்கும்படி இருக்கவேண்டும். அது போன்ற கதை என்பதால் இதில் நடித்தேன் இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கதையை இயக்குனர் ராஜா என்னிடம் சொல்லும் போதே இது நன்றாக வரும் என்று நினைத்தேன். அது நடத்திருக்கிறது.

இந்த படத்தில் நான் நடித்திருக்கும் வேடத்துக்கும் என் குணத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த படம் எனக்கு புதிய அனுபவம். தனி ஒருவன் படம் வெளியான பிறகு பாராட்டுகள் ஏராளமாக வருகிறது. எனது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் போது எனக்கு மன நிறைவு ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லை.

அடுத்து வேறு முயற்சி எடுப்பேன். என் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு சொந்த நிறுவனம் உள்ளது. எனது ஐ.டி. கம்பெனியில் 5 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். இந்தியா முழுவதும் இதன் கிளைகள் உள்ளன. இதை நன்றாக நடத்த வேண்டும். நடிப்பும் எனக்கு ஒரு தொழில். என்னால் முடிந்த வரை இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முயற்சி எடுக்கிறேன்.

கம்பெனியை கவனித்துக் கொண்டு நேரம் கிடைக்கும்போது கதை கேட்பேன். நானும் ஒரு கதை தயாரித்து வைத்திருக்கிறேன். படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு.

இதற்கு கொஞ்சநாள் ஆகும். தனி ஒருவன் படத்துக்கு பிறகு இந்தியில் ‘டியர்டாட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறேன். பொருத்தமான கதை அமையும் போது அடுத்த படத்தில் நடிப்பேன் அதற்கு வித்தியாசமான கதை அமைய வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries