இது நம்ம ஆளு படபிரச்சினை: நயன்தாராவிடம் நடிகர் சங்கம் விசாரணை

25975-001சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் “இது நம்ம ஆளு”. பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். இதன் வசனகாட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. நயன்தாரா வேறுபடங்களில் நடிக்கப்போய்விட்டதால், 2 பாடல் காட்சிகள் படமாக்கப்படாமல் உள்ளது.

இதனால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ‘இது நம்ம ஆளு’ படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா மீது புகார் அளித்தார்.

அதில், நயன்தாரா பாடல் காட்சியை முடித்துக்கொடுத்தால்தான் படத்தை வெளியே கொண்டுவரமுடியும். சம்பள பாக்கி முழுவதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

பாடல் காட்சியில் அவர் நடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.

நயன்தாராவிடம் விளக்கம் கேட்டபோது, அவர் பாடல் காட்சிக்காக பல தடவை கால்ஷீட் கொடுத்தேன். ஆனால், ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினர் அதை பயன்படுத்தாமல் விரயம் செய்துவிட்டனர். இப்போது நான் வேறுபடங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

அவர்கள் கேட்கும் தேதியில் என்னால் நடிக்க இயலாது என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது. நயன்தாரா, சிம்பு தரப்பினரிடம் சுமுக தீர்வுக்காக சரத்குமார் தொடர்ந்து பேசிவருகிறார் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. நயன்தாரா பாடல் காட்சியில் நடிப்பாரா, மாட்டாரா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online