ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கு பிரமாண்ட அரங்குகள்

CMnknprUwAAl6UCரஜினியின் ‘கபாலி’ முதல் கட்ட படப்பிடிப்பு வருகிற 17–ந்தேதி சென்னையில் தொடங்கு கிறது. பூஜைக்கு பிறகு முதல் காட்சி சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார்.

அடுத்து நடைபெறும் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஸ்டூடியோ, சென்னையை அடுத்துள்ள பனைப்பூர், ஆதித்யராம் ஸ்டூடியோ ஆகியவற்றில் நடைபெற உள்ளது.

கபாலி படப்பிடிப்புக்காக இந்த இரண்டு ஸ்டூடியோக்களிலும் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கதைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘ஷெட்’களில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு வெளியே அமைந்துள்ள இந்த ஸ்டூடியோக்களில் ஏற்கனவே புலி, மாஸ் உள்பட பல முக்கிய படப்பிடிப்புகள் நடந்துள்ளன. இப்போது ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பும் இங்கு நடைபெற உள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online