விஷால் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் தியேட்டரில் ரசிகர்கள் ரகளை

puli-story_647_082715045727பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சினிமா தியேட்டர் உள்ளது. இங்கு சமீபத்தில் வெளியான விஷால் நடித்த ‘பாயும்புலி’ படம் திரையிடப்பட்டு உள்ளது.

நேற்று இரவு 10 மணி காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. படம் ஓடிய சுமார் ½ மணி நேரத்தில் திடீரென திரையில் ‘சவுண்டு’ மட்டும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

தியேட்டர் ஊழியர்கள் சவுண்டு கோளாறை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. இதையடுத்து படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சிலர் தியேட்டர் முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் தண்டையார்பேட்டை போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இரவு காட்சி படம் பார்க்க வந்தவர்களுக்கு டிக்கெட் பணத்தை திருப்பி கொடுப்பதாக தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் நேற்று இரவு அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online