சினிமா படவாய்ப்பு இல்லாத இலியானா

ileana_d_cruzதெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா அங்கு கொடிகட்டி பறந்தார். இதனால் அவருக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. 2012–ல் ‘பர்பி’ படம் மூலம் ‘கோலிவுட்’டில் கால் பதித்தார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்தார். இதனால் மும்பையில் செட்டில் ஆனார். இவரது படங்கள் ஓரளவு ஓடின.

2014–ல் இலியானா நடிப்பில் ‘ஹேப்பி என் டிங்’ என்ற படம் வெளியானது. அதன்பிறகு மும்பை பட உலகில் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி கேட்டால் ‘நல்ல கதாபாத்திரங்கள் அமையாததால் சிறிய இடைவெளி விட்டிருக்கிறேன்.

நல்ல பாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். திரை உலகை விட்டு விலக வில்லை. தற்போது ஒரு நல்ல கதை வந்திருக்கிறது. அதில் நடிப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது பற்றி அறிவிப்பேன் என்று சொல்லி சமாளிக்கிறார்.

அசின் தமிழில் இருந்து இந்திக்கு சென்று படவாய்ப்பு இல்லை என்றாலும், பிரபல தொழில் அதிபரை காதலித்து மணக்க இருக்கிறார். இப்போது இலியானாவுக்கு அதே நிலைமை வந்திருக்கிறது. இவரிடம் எந்த தொழில் அதிபர் சிக்குவாரோ என்று மும்பை பட உலகில் பேசிக்கொள்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries