என்னுடன் நடிக்க மறுத்த நாயகிகளை பழி வாங்குவேன்: பிரேம்ஜி

Premgi-080213130208163439பிரேம்ஜி கதாநாயகனாக நடித்துள்ள ‘மாங்கா’ பட அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது அவர் அளித்த பேட்டி– இந்த படத்தில் நான் விஞ்ஞானியாகவும், பாகவதர் போன்றும் நடிக்கிறேன். இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். குழந்தைகள் ஜாலியாக ரசிக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

நான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று 2006–ல் நினைத்தேன். அது 2015–ல்தான் நிறைவெறி இருக்கிறது. நான்தான் இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன். ஆர்.எஸ்.

ராஜா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்க பல கதாநாயகிகளிடம் கேட்டும் அவர்கள் என்னிடம் நடிக்க தயாராக இல்லை. அவர்களுடைய பட்டியலை கேட்டு வாங்கி இருக்கிறேன். இப்போது மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். விரைவில் நான் பெரிய ஹீரோ ஆவேன்.

எனது அண்ணன் இயக்கும் படத்திலும் நான் முக்கிய இடம் பிடிப்பேன். நான் பிரபல ஹீரோ ஆனவுடன் இப்போது என்னுடன் ஜோடியாக நடிக்க மறுத்த ஹீரோயின்களை, எனது படத்தில் அம்மா, அக்காவாக நடிக்க வைத்து பழி வாங்குவேன். என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், நான் இப்போது நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறேன்.

பார்ட்டி, டிஸ்கோ என்று கலந்து கொள்கிறேன். இதனால் எனக்கு பெண் கிடைக்க வில்லை. என்றாலும் இந்த வருடம் எனக்கு திருமணம் செய்து வைத்து குடும்பத்தில் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். குடும்பப் பாங்கான நல்ல பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online