வீதிக்கு வரும் இது நம்ம ஆளு பிரச்னை

Idhu-Namma-Aalu-Official-Teaser“இது நம்ம ஆளு” பட விவகாரம் தொடர்பாக அப்படத்தின் இசையமப்பாளர் குறளரசனுக்கும், பாண்டிராஜுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

”இது நம்ம ஆளு” திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, இயக்குனர் பாண்டிராஜ் பசங்க-2 என்ற படத்தை தொடங்கி அதன் படப்பிடிப்பையே முடித்துவிட்டார்.

ஆனால் இது நம்ம ஆளு படம் வெளிவருவது போல் தெரியவில்லை. சமீபத்தில், இப்படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் , இப்படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு நயன்தாரா கால்ஷீட் தர மறுப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் நயன்தாரா தரப்பிலோ தான் ஏற்கனவே நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்து விட்டதாகவும், வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இது நம்ம ஆளு படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க, இப்படத்தின் இசையமப்பாளரும் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தன் ட்விட்டர் பக்கத்தில் “இதுவரை இது நம்ம ஆளு படத்தின் டீஸரை மட்டுமே பார்த்திருக்கிறேன். எப்பொழுது முழுமையான காட்சிகள் கிடைக்கும் என்று தெரியவில்லை.

இப்படத்திற்காக 5 பாடல்களை 2 மாதங்களுக்கு முன்பே முடித்துக் கொடுத்துவிட்டேன். ஆனால் 3 பாடல்களை மட்டுமே படமாக்கி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

கோபமடைந்த இயக்குனர் பாண்டிராஜ் ”தம்பி, நீ யாருன்னு எனக்கு தெரியும். நான் யாருன்னு உனக்கு தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும். ஒரு நல்ல முதலாளிக்கு அழகு தனக்காக உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் அவனுக்கான ஊதியத்தை கொடுப்பது.

இதுவரை எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. தம்பி உனக்கு தூக்கம் வந்தால் போய் தூங்கு. இரண்டு வருடங்களாக இந்தப் படத்தின் மூலம் தான் சந்தித்த போரட்டத்தையெல்லாம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப் போகிறேன்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

”இது நம்ம ஆளு” படம் எல்லா பிரச்சனைகளையும் கடந்து எப்போது வெளிவருமோ!

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online