தனது ஹீரோவின் பிறந்தநாளுக்கு பாடலை பரிசளிக்கும் பிரபுதேவா

akshay-kumar-prabhudeva-nextதொடர் வெற்றிகளால் பிரபுதேவா சமீபகாலமாக பாலிவுட் படங்களை இயக்குவதிலேயே முழுமையாக இறங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘சிங் ஈஸ் பிலிங்’ படத்தின் நாயகனான அக்‌ஷய் குமாரின் 48-வது பிறந்த நாளன்று இப்படத்தில் உள்ள அவருக்கு பிடித்தமான ‘சினிமா தேக்கே மாமா’ பாடலை வெளியிட இருக்கிறார்.

இந்தப் படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி வெளிவர இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் பாடல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அக்‌ஷய் குமாரை வைத்து பிரபுதேவா இரண்டாவது முறையாக இயக்குகிறார்.

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ‘ரவுடி ராத்தோர்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிலிருந்து இவர்களுக்குள் நல்ல நட்பு தொடர்கிறது. அவர்மீது உள்ள அன்பால்தான், இந்தப் பாடலை அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிட இருக்கிறார் பிரபுதேவா.

இந்தப் பாடல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில் உள்ள ஒரு கிராமத்தை முழுவதுமாக பெயிண்ட் அடித்து காட்சியமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார்.

மேலும், விவேக் ஓப்ராய், லாரா தத்தா, யோ யோ ஹனி சிங் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries