கவர்ச்சி நடிகை பாபிலோனா திருமணம்: தொழில் அதிபரை மணந்தார்

1441792952_babilona-marriage-picturesதொழில் அதிபர் சுந்தர் பாபுல் ராஜூக்கும் பாபிலோனாவுக்கும் கிறிஸ்தவ முறைப்படி வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

“தை பிறந்தாச்சு” என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை பாபிலோனா. பின்னர்கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார்.

காதலே நிம்மதி’, ‘என்னம்மா கண்ணு’ உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார,பல படங்களின் கூத்து பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளார்.மேலும் பல கனடா,தெலுங்கு படங்களிலும் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார்.

சில ஆண்டுகளாக பாபிலோனாவுக்கு பட வாய்ப்பு குறைந்து வந்த நிலையில், தொழில் அதிபர் சுந்தர் பாபுல் ராஜூவுடன் பாபிலோனா சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இருவீட்டார் சம்மதத்தில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று,சுந்தர் பாபுல் ராஜூவுடன் பாபிலோனாவுக்கு வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் கிறிஸ்தவ முறைப்படி இன்று காலை 11 மணியளவில் திருமணம் நடைபெற்றது.

வளசரவாக்கம் பாதிரியார் எபினேசர் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

மணமக்களிடம் சம்மதம் கேட்டபிறகு கிறிஸ்தவ முறைப்படி தம்பதிகள் தங்ள் கைகளில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். மணமக்களை அபிராமி ராமநாதன், நடிகர் செந்தில் உள்பட பல திரை நட்சத்திரங்கள் நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு வந்தவர்களை நெல்லை சுந்தர் ராஜன் வரவேற்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries