அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் – உணர்ச்சிவசப்பட்ட நயன்தாரா

1441098751-9483அவருடன் நடிக்கணும், இவருடன் நடிக்கணும் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது நயன்தாரா.

அவருக்கு எல்லோரும் ஒன்றுதான். அதேபோல் எனக்குப் பிடித்த நடிகர் என்று யாரையும் குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டதில்லை. அவரே ஒரு நடிகரை பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசைப்பட்டேன் என்று சொன்னால்…?

அவர் அரவிந்த்சாமி.

தனி ஒருவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஜெயம் ரவி ஹீரோ என்பது மட்டும்தான் நயன்தாராவுக்கு தெரியுமாம். அரவிந்த்சாமி நடிப்பது அதற்குப் பிறகே தெரிய வந்திருக்கிறது.

“அரவிந்த்சாமி எனக்குப் பிடித்த நடிகர். அவருடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் இருக்கிறதா என்று டைரக்டரிடம் கேட்டேன். ஒரேயொரு காட்சி இருக்கிறது என்றார்.

அந்தக் காட்சியில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். அது மறக்க முடியாத நிகழ்வு. எனக்கு அரவிந்த்சாமியை ரொம்பப் பிடிக்கும். அவர் சிறந்த நடிகர்” என நயன்தாரா கூறினார்.

எதற்கும் உணர்ச்சிவசப்படாதவரை அரவிந்த்சாமி பரவசப்படுத்தியிருக்கிறார்.

ரோஜா எபெக்ட் இன்னும் தீரலையோ.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online