பின்னணி இசை இல்லாமல் திரையிடப்படும் வெற்றிமாறனின் விசாரணை

ET00027697‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வரும் புதிய படம் ‘விசாரணை’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படம் கோயம்புத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் சுயசரிதையை புத்தகமாக தொகுத்து வெளிவந்த ‘லாக்கப்’ என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே, வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை பின்னணி இசை இல்லாமலேயே இந்த திரைப்பட விழாவில் திரையிட வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டப்பிங் மற்றும் சில சவுண்ட் எபெக்ட்ஸுகளை மட்டும் பயன்படுத்தி புதுவிதமான அனுபவத்துடன் இப்படத்தை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கவுதம்மேனன் ‘நடுநிசி நாய்கள்’ படத்தில் இந்த மாதிரி புது யுக்தியை பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries