மாயாவுக்காக சம்பளம் பேசாத ஆரி

Tamil Actor Aari Photoshoot Stills

Tamil Actor Aari Photoshoot Stills

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் திகில் படம் ‘மாயா’. இப்படத்தை அஷ்வின் சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் ஆரி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 17-ந் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் நடிகர் ஆரி நடிக்க வேண்டிய வேடத்தில் முதலில் ‘நான் ஈ’ படத்தில் நடித்த நானி தான் நடிப்பதாக இருந்ததாம். அதன்பிறகு, சில காரணங்களால் ஆரிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆரி கூறும்போது, இந்த படத்தில் முதலில் நானி நடிப்பதாக தான் இருந்தது. பின்னர் சில காரணங்களால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் இந்த கதையை கேட்டதும் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன். அதற்கு காரணம் படத்தின் கதை.

சில படங்களில் தான் படத்தில் நடிக்கும் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும், அந்த சில படங்களைபோல் இந்த படத்திலும் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். படத்தை வெளியிடும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, நான் வெளியிட்ட பேய் படங்களிலேயே சிறந்த படம் இதுதான் என்று கூறியுள்ளார்.

முதன் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் ட்ரைலர் உலக அளவில் ஆங்கிகாரம் பெற்றுள்ளது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்று கூறினார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries