விக்ரம் பிரபுவுடன் ஐந்தாவது முறையாக இணையும் டி.இமான்

D.Imman_விக்ரம் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமான ‘கும்கி’ படத்திற்கு இசையமைத்தவர் டி.இமான். இப்படத்தில் இவருடைய இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றியடைந்தன.

இதைத் தொடர்ந்து இக்கூட்டணி, ‘சிகரம் தொடு’, ‘வெள்ளக்கார துரை’ ஆகிய படங்களிலும் தொடர்ந்து பணியாற்றினர். இப்படங்களின் பாடல்களும் ஒரளவுக்கு வெற்றியடைந்தன. இருவரும் இணைந்தாலே அந்த படங்களின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற கணிப்பிலேயே விக்ரம் பிரபு நடிக்கும் படங்களுக்கெல்லாம் டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி வந்தார்.

அந்த வரிசையில் தற்போது விக்ரம் பிரபு ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘வாகா’ படத்திற்கும் டி.இமான்தான் இசையமைத்துள்ளார். விரைவில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் ‘வீரசிவாஜி’ படத்திற்கும் டி.இமானே இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘வீர சிவாஜி’, விக்ரம் பிரபுவும் டி.இமானும் இணையும் ஐந்தாவது படமாகும். விக்ரம் பிரபு நடித்துள்ள மொத்தம் 7 படங்களில் 5 படங்களுக்கு டி.இமானே இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வீரசிவாஜி’ படத்தை ‘தகராறு’ படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கவுள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கவிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online