விஷாலுக்கு காதல் தோல்வி – அவரே சொன்ன ரகசியம்

1441897641-671தாடி வளர்க்கலை, நாடி தளர்ந்து போகலை…. அப்புறம் எப்படி விஷாலுக்கு காதல் தோல்வி என்று வெளியுலகுக்கு தெரியும்?

நேற்றுவரை யாருக்குமே தெரியாத ரகசியம்தான் இந்த காதல் தோல்வி.

எம்.ஓ.பி.கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் சுசீந்திரனும், நடிகர் விஷாலும் கலந்து கொண்டனர். அப்போது மாணவிகள் அவர்களிடம் கேள்விகள் கேட்டனர். உங்கள் படங்களிலேயே சிறந்த நடிப்பு என்று எதைச் சொல்வீர்கள் என்று ஒரு கேள்வி.

இதற்கு பதிலளித்த விஷால், காதல் தோல்விக்குப் பிறகு நான் நடித்தப் படம்தான், நான் இதுவரை நடித்ததிலேயே சிறந்த நடிப்பு. அப்போது நான் உடைந்து போயிருந்தேன். ஆனால், அதுதான் என்னுடைய தொழில். வலி அனைத்தையும் ஒதுக்கிவிட்டு நடித்தேன். அந்தப் படம்தான் என்னுடைய சிறந்த நடிப்பு என்றார்.

சரி, விஷால் சொல்லும் அந்தப் படம் எது?

அது யாருக்கு வேண்டும்? விஷாலை தோல்வியடைச் செய்த அந்த காதலி யார்?

தெரிஞ்சவங்க சொல்லலாமே.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online