பாட்ஷா 2 – விடாது கருப்பு

1441885376-005கபாலி பாட்ஷா போல் இருக்குமா என்ற கேள்விக்கு, பாடஷா மாதிரி ஒரு படம் வராது. ஒரே பாட்ஷாதான் என்று ரஜினி பதிலளித்ததைத் தொடர்ந்து, மீண்டும் பாட்ஷா தலைப்புச் செய்திகளில்.

பாட்ஷாவை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா பார்ட் டூ கனவோடு பலமுறை ரஜினி வீட்டு கதவை தட்டியும் அவருக்கு நோ என்ற பதில்தான் கிடைத்தது. சரி, அஜித்தை முயற்சி செய்யலாம் என்று ரூட்டை மாற்றினார்.

பாட்ஷா 2 எடுத்து பாட்ஷாவின் பெயரை கெடுக்க வேண்டுமா? பாட்ஷா ஒரு பாகமாகவே இருந்துவிட்டு போகட்டுமே என்று ரஜினி கூறியதைத் தொடர்ந்து பாட்ஷா 2 முயற்சியை சுரேஷ் கிருஷ்ணா கைவிட்டார். ஆனாலும், அஜித்தை வைத்து பாட்ஷா மாதிரி ஒரு படம் பண்ணும் ஆசை அவரிடம் உள்ளது.

ரஜினி பாட்ஷாவை புகழ்ந்ததையடுத்து மீண்டும் சீனுக்கு வந்துள்ளார், சுரேஷ் கிருஷ்ணா.

“நான் இயக்கிய படத்தை பற்றி ரஜினியும் மற்றவர்களும் இன்னமும் பேசி வருவது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கூறுவதுபோல் உண்மையிலேயே ‘பாட்ஷா’ படம் போன்று இன்னொரு படம் எடுக்க முடியாது.

அஜித் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவரை வைத்து பாட்ஷா மாதிரியான ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது அமைந்தால் கண்டிப்பாக அவருக்காக கதை அமைத்து படம் இயக்குவேன்” என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அஜித்தின் மனதில் என்ன இருக்கிறதோ.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries