காதல் திருமணம் செய்யமாட்டேன்: நடிகை பூர்ணா பேட்டி

Poorna_Gallery_04கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. தமிழில் பரத் ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ‘கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, வித்தகன், தகராறு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். பூர்ணா தெலுங்கு ஒளிப்பதிவாளரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பின. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“என்னுடைய சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். தற்போது 4 படங்கள் கைவசம் உள்ளன. நான் காதலிப்பதாக செய்திகள் பரவி உள்ளன. அதில் உண்மை இல்லை.

யாரையும் காதலிக்கவில்லை. திருமணத்துக்கு தற்போது நான் தயாராகிவிட்டேன். விரைவில் என் திருமணம் நடக்கும். ஆனால் அது காதல் திருமணமாக இருக்காது. பெற்றோர் எனக்கு பொருத்தமான வரன் பார்த்து வருகிறார்கள். அவர்கள் தேர்வு செய்யும் மாப்பிள்ளையை மணப்பேன்”.

இவ்வாறு பூர்ணா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online