ஆஸ்கருக்கு செல்லும் குற்றம் கடிதல்

03-kadi-600ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் கிறிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவரவில்லை. ஆனால், அதற்குள் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது.

பிரம்மா ஜி இயக்கியுள்ள இப்படம் கோவா, ஜிம்பாப்வே, பெங்களூர், மும்பை ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், 87-வது ஆஸ்கர் விருதுக்காகவும் இந்த படத்தை அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பள்ளி கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர்-மாணவர்கள் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்தவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களை தூண்டக்கூடிய வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ராதிகா பிரசித்தா, சாய் ராஜ்குமார், மாஸ்டர் அஜய் உள்பட பலர் நடித்துள்ளன. 24 மணி நேரத்தில் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries